கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரணைமடு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த வறட்சி தொடர்ச்சியாக நீடித்தால், அடுத்த ஆண்டில் மீன்பிடியில் பாரிய பாதிப்பு ஏற்படுமெனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான சூழ்நிலைக்கு அடுத்த படியாக, இரணைமடு குளத்தில் காணப்படும் முதலைகளின் அச்சுறுத்தல், தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குளத்தில் காணப்படும் முதலைகளிற்கு அப்பால் வெளி இடங்களில் பிடிக்கப்படும் முதலைகளும் இங்கு கொண்டுவந்து விடப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த முதலைகளால் தமக்கு அச்சுறுத்தல்கள் பலமுறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பல தரப்பட்டவர்களிற்கு எடுத்து கூறியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.