அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்க வாக்காளர்கள் முடிவு செய்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.இந்நிலையில், கருத்துக்கணிப்புகளை நடத்தும் அந்நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனமான ராஸ்முசன், சமீபத்தில் தனது கருத்துக்கணிப்பு முடிவினை வெளியிட்டுள்ளது. தொலைப்பேசி மற்றும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதில் 52 சதவீதம் பேர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 42 சதவீதம் பேர் டிரம்புக்கு மீண்டும் வாக்களிக்க உள்ளதாகவும், 6 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் குடியரசு கட்சியினர் 75 சதவிதம் பேர் டிரம்புக்கு மீண்டும் வாக்களிக்க உள்ளதாகவும், 21 சதவீதம் பேர் டிரம்புக்கு எதிராகவும் வாக்களிக்க உள்ளதாக தெரிவிவத்துள்ளனர்.