பிரக்சிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்துவதை விட சாக்கடையில் விழுந்து சாகலாம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கோபமாக தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இப்பிரச்சினையால் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை இழந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது சகோதரர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் வட இங்கிலாந்து பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்த கோருவதை விட சாக்கடையில் விழுந்து சாவதே மேல் என்று பேசினார். அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியே வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.