அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக சாடியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு சாடியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டங்களை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு உண்மையான தேவையில்லை. அதனால் தான் நான்கு வருடமாகியும் இதனை மேற்கொள்ளவில்லை.
அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அதனை நாங்கள் வரவேற்க்கின்றோம்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அழுத்தம் கொடுப்பதற்கே தற்போது பிணைமுறி தொடர்பாக அரச தரப்பினர் கதைக்கின்றனர்.
என்றாலும் தற்போதாவது இதுதொடர்பாக கதைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.