ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்று வருகின்றது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
‘சரியான பக்கத்திற்கு தீர்மானம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் ‘சுனில ஜனவாத’ என்ற தலைப்பில் கொள்கைத் திட்டமும் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய அறிவித்தல் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

