ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புக்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இந் நிலையில் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பது குறித்து சகல கட்சி செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10 ஆம் திகதிக்கும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்ந்த நிலையில் இது தொடர்பாக கட்சி செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

