நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிமிடம் காணப்படும் பொறுப்புக்கள் பலவற்றை அமைச்சர் லட்க்ஸ்மன் கிரியெல்லாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் கபீர் ஹாஷிமிடமிருந்த பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் பல பகுதிகளை அமைச்சர் கிரியெல்லவுக்கு வழங்குமாறு பிரதமர் இதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரினால் இந்த கோரிக்கைக் கடிதம் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்றைய சகோதார தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.
அமைச்சர் கபீர் ஹாசிம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் பதவி வகித்தவர். ஐ.தே.க.யின் சிரேஸ்ட உறுப்பினரான இவர் அண்மைக் காலமாக சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குமாறு குரல் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.