ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எதிர்க் கட்சியுடன் உள்ள சகலருக்கும் எதிர்வரும் 11 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பின்னரேயே இடம்பெறும் எனவும், இக்கூட்டத்தில் கட்சியின் தலைமையை மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஒப்படைக்கும் நிகழ்வும், பின்னர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ மேலும் கூறினார்.
கூட்டு எதிரணியுடன் ஏற்கனவே உள்ள கட்சிகளின் கருத்துக்களுக்கு அமைவாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.