நாட்டில் சில பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பொழிகின்றமையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 -65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.