நாவுல – எலஹெர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை உயிரிழந்து இரு மகள்கள் காயமடைந்துள்ளனர்.
தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது உந்துருளியினை கட்டுப்படுத்த முடியாமையினால் உந்துருளி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் 10, 14 வயதுடைய இரு மகள்களும் பக்கமுன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, தந்தை உயிரிழந்துள்ளார்.
இரு மகள்களும் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.