கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லண்டனில் இருந்து புறப்படும் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தங்கள் சேவையை ரத்து செய்தன.
பயணிகள் வருகை தொடர்பான பதிவுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லண்டனில் உள்ள ஹீத்ரு மற்றும் கேட்விக் விமான நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படுவதிலும், வந்து சேருவதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஹீத்ரு விமானநிலையத்தில் 81 விமானங்களும், கேட்விக் விமானநிலையத்தில் 10 விமானங்களும் பயணத்தை ரத்து செய்தன.
இதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்புக்கு உள்ளாயினர். மேலும் 200க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகையும், புறப்பாடும் தாமதமாகின. கடந்த 2016ம் ஆண்டும் இதேபோன்று பிரச்னை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.