மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளும் அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளும் மத்தள விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அதற்கமைய அவர்கள் இன்று அங்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.
குறித்த விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு அங்கு செல்லவுள்ளது.
நெல் களஞ்சியப்படுத்தப்படுவதால் கட்டடத்தின் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.