Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் தயார் – ரிஷாட்

June 12, 2019
in News, Politics, World
0

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால் எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று  கண்டியில் இடம்பெற்ற போதே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத செயற்பாடுகள் ,வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக துறந்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவு படுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன் எம்.பி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.

அவர் கூறியதாவது,

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்குமென்று, குண்டு தாக்குதல் நடந்த (21-04-2019) அன்றைய தினமே பேராயர் கார்டினல் ரஞ்சித் அவர்களை சந்தித்து, முஸ்லிம் மக்களின் அரசியல் மற்றும் சமயம் சார் பிரதிநிதிகளான நாம் அனைவரும் எடுத்துரைத்தோம். அன்று தொட்டு இன்று வரை இந்த பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பாதுகாப்பு படையினரின் அனைத்து தேடுதல் பணிகளுக்கும் நாங்கள் உதவினோம். சாய்ந்தமருதுவில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை எமது சமூகம் காட்டிக்கொடுக்க முனைந்த போது அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வீசியெறிந்து எம்மை காட்டிக்கொடுக்க வேண்டாமென கெஞ்சினர். எனினும் சாய்ந்தமருது மக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளை காட்டிக்கொடுத்தனர். சூத்திரதாரிகள் இவ்வாறு செய்யவேண்டாமென கெஞ்சிய போதும் பொலிசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் இருந்த இடத்தையும் காட்டிக்கொடுத்து பயங்கரவாதிகளை இல்லாமலாக்க உதவினோம்.

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. இவ்வாறான பயங்கரவாதிகளை இஸ்லாமியர் என நாங்கள் கூறமாட்டோம்.குர் ஆனிலோ நபி பெருமானாரின் வழிகாட்டலிலோ மக்களை கொலை செய்யுமாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை . அத்துடன் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுமுழுதாக எதிரானவர்கள்.

மகா நாயக்க தேரர் தற்போது கூறியவாறு, வரலாற்றிலே இலங்கை முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களும் இல்லை, சம்பந்தப்பட்டவர்களும் இல்லை. இந்த பயங்கரவாதம் உலகளாவிய பயங்கரவாதம். நமது நாட்டிலுள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் இதனுடன் தொடர்புபட்டு விட்டனர். எனவே தான் இந்த செயலில் ஈடுபாடு கொண்டவர்களை அழித்தொழிப்பதற்கு முழு மூச்சாக ஒத்துழைக்கின்றோம் . நாங்கள் எந்த அடிப்படைவாதத்தையும் ஆதரிக்கவுமில்லை ,ஆதரிக்கவும் மாட்டோம் .எல்லோருடனும் இணைந்து அதனை ஒழிப்பதற்கு பாடுபடுவோம். இந்த பயங்கரவாதச் செயலை மையமாக கொண்டு ஒரு சில கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் தமது அரசியல் எழுச்சிக்கு இதனை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதன்மூலம் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயற்படுகின்றனர் . இவர்களின் இந்த செயற்பாடுகளுக்கு சில ஊடகங்களும் துணை போகின்றன. அந்தவகையில் முஸ்லிம்களிடம் வாள்கள் இருப்பதாகவும் , ஆயுதங்கள் இருப்பதாகவும் ஒரு பிரமையையும் காட்டி மக்கள் மத்தியிலே பீதியையும் முஸ்லிம்கள் தொடர்பான வெறுப்பையும் ஊட்டும் முயற்சிகளிலே அவை ஈடுபடுகின்றன. அப்பாவி முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் அவற்றின் செயற்பாடுகள் அமைகின்றன.

அதுமாத்திரமன்றி எனக்கெதிராக வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர். பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற வேளை, சில அரசியல்வாதிகள் தமது குறிக்கோளை அடைந்து கொள்வதற்காக இதனை திசைதிருப்புகின்றனர். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Previous Post

பதவிகளை ஏற்பதாக கூற வரவில்லை, நிலைமையை விளக்கவே வந்தோம்

Next Post

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு

Next Post

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures