Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன?

April 25, 2019
in News, Politics, World
0

மாதம்பைப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட மாதம்பை அரபுக் கல்லூரியில் சேவை ஆற்றிய எகிப்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக  கல்லூரி நிருவாகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய கைது தொடர்பில் மாதம்பை அரபுக் கல்லூரியின் பொறுப்பாளர் அஸ்செய்க் நௌஸர்   இதனைக் கூறினார்.

அஸ்ரப் அப்துல் பத்தாஹ் சித்தீக் முஹம்மத் எனும் பெயரையுடைய குறித்த வெளிநாட்டு ஆசிரியர் கடந்த 2018 ஜனவரி 17 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் இலங்கை வந்துள்ளார்.

இவருடைய ஒரு வருட ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சிடம் இவருடைய தகவல்கள் அனைத்தையும் வழங்கி வீசாவைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கலாச்சார அமைச்சின் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு அவருடைய தகவல்கள் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 2019 ஏப்ரல் 03 ஆம் திகதி வீசா வழங்கலாம் என்ற அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இது குடிவர குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு இவருக்கான வீசா இன்று (25) கிடைக்கப் பெற்றது.

இந்த வீசாவுடன் கூடிய இவரது கடவுச் சீட்டை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாதம்பை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், “கொன்ட்ரோலரின்” கடிதத்தை காட்டினால் அவரை விடுதலை செய்வதாக பொலிஸார்  ஆரம்பத்தில் கூறினர். அதனைக் காட்டியதன் பின்னர் மீண்டும் கடவுச் சீட்டைக் காட்டுமாறு கூறினர். இன்று கடவுச் சீட்டைக் காட்டிதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக கூறுகின்றனர்.

அரபுக் கல்லூரிகளுக்கு எகிப்து பல்லைக்கழகத்தினால் ஆசிரியர்களை வழங்கும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும் – எகிப்து அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றது. இவர்களுக்கு இலங்கையிலுள்ளவர்கள் உணவும், தங்குமிடமும் மாத்திரமே வழங்குவதாகவும் கல்லூரி நிருவாகி தெரிவித்தார்.

நேற்று இவர் கைது செய்யப்பட்டவுடன் கடந்த 4 வருடங்களாக வீசா இன்றி இருந்ததாக ஊடகங்களில் கூறப்பட்டது. இருப்பினும், இவர் ஒரு வருட வீசாவுடன் கடந்த 2018 ஆம் திகதியே இலங்கைக்கு முதல் தடவையாக வந்துள்ளதாகவும் கல்லூரி நிருவாகி அஸ்செய்க் நௌஸர் எம்மிடம் விளக்கமளித்தார்.

கல்லூரி வளாகத்திலிருந்த வாகனம் மாதம்பை கிராமவாசியொருவர் அரபுக் கல்லூரி விடுமுறை என்பதனால், வளாகத்தில் அனுமதியைப் பெற்று நிறுத்திச் சென்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

சிறையிலுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளை உடன் விடுதலை செய்க

Next Post

தற்கொலை குண்டுதாரி இலங்கை அரசிடம் விருது பெற்றவர்!

Next Post

தற்கொலை குண்டுதாரி இலங்கை அரசிடம் விருது பெற்றவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures