Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார்

April 21, 2019
in News, Politics, World
0

தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார்.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

30 ஆண்டுகள் போருக்கு பின் ஒரு சகாப்தம் முடிந்திருக்கின்றது. ஒரு தலைமுறையே எங்கள் தேசத்தை விட்டு போகவேண்டிய கட்டாயத்தினை காலம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினாலே மீதி இருக்கின்ற நாங்கள் வளர்ந்துவரும் இந்த இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்குகின்ற இரட்டிப்பான பொறுப்பை எங்கள் தோளிலே சுமந்திருக்கின்றோம். ஆகையினாலேதான் இங்கே கூடியிருக்கும் அரசியல் . அரசாங்கம், அரசு என்ற மூன்று பகுதியையுடைய பிரதிநிதிகளையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள். வெவ்வேறு பகுதிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழரை பொறுத்தவரையில் இருப்பது ஓரு தேசம், இருப்பது ஒரு எதிர்காலம் கட்டவேண்டியது ஒரு சமுதாயம் ஆகையினாலே கட்டியமைக்கவேண்டிய அந்த சமுதாயத்திற்கான குறைந்தது குறிப்பிட்ட காலத்திற்காவது உங்கள் வேற்றுமைகளை விட்டு எங்கள் மக்களுக்காக பணிபுரியுங்களென்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்வதுடன் அதுவே இந்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய திடமான தீர்மானம் ஆகுமென்று கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

எமக்கு செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது. செய்யவேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றது. ஆகையினாலே பேச்சுக்களையும் சந்திப்புக்களையும் குறைத்து அதிகளவில் வேலை செய்யவேண்டிய ஒரு கட்டாயம் எங்கள் மத்தியில் உள்ளது. இந்த புத்தாண்டிலே வடமாகாணம் ஒரு முன்மாதிரியான மாகாணமாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கமென்றும் குறிப்பிட்ட ஆளுநர், வடமாகாணத்தின் 28 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் நான் நேற்று கையொப்பமிட்டுள்ளதுடன் இந்த 28 பில்லியனில் நாங்கள் எவ்வளவு வடமாகாணத்திற்குள் உழைத்துக் கொள்ளப்போகின்றோம் என்பது கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மாகாணத்தின் முழுவருமானத்தையும் எங்களுக்குள்ளேயே நாங்கள் உழைத்துக் கொள்ளமுடியும். ஏனெனில் பொருளாதார சுதந்திரம் இல்லாத ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரத்தை யோசிக்கமுடியாது. ஆகையினாலே அடிப்படையாக எமது மக்கள் பொருளாதார சுதந்திரத்தை அடையக்கூடிய வழிமுறைகளை நாங்கள் தேடவேண்டியதுடன் அது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகவுள்ளது என்றும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.

தேசத்தை கட்டியெழுப்பும் பணியிலே அரசியல் சின்னங்களையும் அரசியல் யாதார்த்தங்களையும் குறிக்கோள்களையும் ஒரே ஒருமுறையாவது பின்வைத்து இந்த மக்களை நிமிர்த்த செய்வதற்காக முன்வாருங்களென வடமாகாணத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கௌரவ ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

Previous Post

2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Next Post

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்பு

Next Post

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures