அஜித் நடித்த உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தபோதும், அவர் நடனமாடிய, “வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும்…, கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு…” போன்ற பாடல்கள் தான் மாளவிகாவை பெரிய அளவில் பேச வைத்தன.
2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா, இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவானார். இப்போது தனது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழில் நடிக்க 2 இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும், என் திறமைக்கு ஏற்ற சவாலான எந்தமாதிரியான கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பதாக” மாளவிகா கூறியுள்ளார்.











