Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்தார் ஜனாதிபதி

April 9, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

திருப்திகரமான, வினைத்திறனான மக்கள் சேவையை மகிழ்ச்சியோடு வழங்கக்கூடிய பொலிஸ் சேவையொன்றை தாபிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் மட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து, அவர்களது நலன் பேணல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அச்செயற்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்தல், இணைந்தபடி கொடுப்பனவினை உயர்த்துதல், பொலிஸ் நிலையங்களின் வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பூரண சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையை விரிவுபடுத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, இதற்காக பொலிஸ் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமானது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அத்தோடு பொலித்தீன் பாவனை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட அதிகாரங்கள் பொலிசாருக்கு வழங்கப்படவில்லை என்பதால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் குறித்த ஒழுங்கு விதிகளில் விரைவில் திருத்தம் செய்வதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஹெரோயின் பாவனையாளர்கள் மற்றும் அதற்கு அடிமையானவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பாவனையாளர்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Previous Post

அமெரிக்காவில் மனு தாக்கல் செய்ய காரணம் பயம்

Next Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு – தனியார் பேருந்து சேவை

Next Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு - தனியார் பேருந்து சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures