யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறையில் வருடாந்தம் இடம்பெறும் இந்திரவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை சிறி முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த
மஹோற்சவம் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
தேர்த்திருவிழா 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. மறுநாள் 19 ஆம் திகதி வெள்ளிக்கிமை காலை தீர்த்தத்திருவிழா நடைபெறும்.
அன்றிரவு சிறப்பான மின் அலங்காரங்களுடன் கூடிய இந்திர விழா இடம்பெறவுள்ளது. இதற்கென நவீன முறையாக மின் அலங்கார ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

