Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி

April 7, 2019
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அவர்கள் அங்கு நடத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகரில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகளை பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்புகளால் ஜலாலாபாத் நகரம் அதிர்ந்தது. இவற்றில் சிக்கி 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

19 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர்.இந்த குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

Previous Post

தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமான உற்பத்தி குறைப்பு

Next Post

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Next Post

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures