வடமராட்சி- துன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி கொடிகாமம் வீதியில் நேற்று இரவு மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதுண்டு, அருகிலிருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மற்றையவர் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் கா.கஜீபன் (18 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 21 வயதான இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

