இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து விடுவார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனுகீர்த்திவாஸ். திருச்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேகத்தில் சினிமாவுக்கும் வந்து விட்டார்.
ஜானி படத்தை தொடர்ந்து தியாகராஜன் தயாரிக்கும் படம் சேலஞ்ஜ். இதில் பிரசாந்த் ஹீரோ. அவருக்கு ஜோடியாக அனுகீர்த்திவாஸ் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர், சாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசாந்த் நடித்த சாக்லெட் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஹிந்தி இசை அமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி இசை அமைக்கிறார். வேல்ராஜ் உதவியாளர் ஷிவக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
நாளை முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து நாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இது ஆக்ஷன் த்ரில்லர் வகை படம்.












