Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியானது

April 6, 2019
in Cinema
0

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அரசியல் ரீதியான படம் என முதலில் செய்திகள் கசிந்தன.

பின்னர், ரஜினி போலீசாக நடிப்பது கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது. ரஜினிகாந்த் – முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஏப்., 10ம் தேதி முதல் மும்பையில் துவங்குகிறது. முன்னதாக படத்திற்கான போட்டோ ஷூட் பணிகள் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.

அதில், ரஜினியை போலீஸ் உடையில் வைத்து பல்வேறு விதமான போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையதளங்களில் லீக்காகி உள்ளன. இதன்மூலம் ரஜினி, போலீஸ் வேடத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

ரஜினி ஏற்கனவே, மூன்றுமுகம், பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் போலீசாக நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினி மீண்டும் போலீசாக நடிக்கிறார். இப்படம் அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது.

Previous Post

ரூ.1000 கோடி மகாபாரதம் படம் கைவிடப்பட்டது

Next Post

தமிழ் படத்தில் இந்திய அழகி : பிரசாந்த்திற்கு ஜோடி

Next Post

தமிழ் படத்தில் இந்திய அழகி : பிரசாந்த்திற்கு ஜோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures