காவியுடை அணிந்து கொண்டு 10 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையில் தேரர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் கையெழுத்துக்களை சேகரிப்பது இன்று நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்காக அல்லவெனவும் அமைச்சர் ரிஸாட் பத்தியுத்தீன் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
வில்பத்து விடயத்தில் நாம் ஒரு தவறையும் செய்யவில்லை. யார் தவறு செய்துள்ளனர் என்பதை யாரும் அறிந்தே வைத்துள்ளனர். சுற்றாடலுக்காக குரல் கொடுப்பதாக இருந்தால், அதற்காகவேதான் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஒரு கிராமத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு சூழல் பாதுகாப்பு எனப் பேசுவதை எப்படி நியாயம் காண்பது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
10 லட்சம் அல்ல எத்தனை லட்சம் கையெழுத்துக்களை சேகரித்தாலும் எமது போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

