Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்

April 4, 2019
in Cinema
0

எழுத்தாளர் கல்கி எழுதிய காவிய படைப்பு பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கிய எம்ஜிஆர்., சிவாஜி, கமல் போன்ற நடிகர்கள் எல்லாம் இதை படமாக எடுக்க முயற்சித்து கைவிட்டனர். இந்நிலையில், மணிரத்னம் இதை கையில் எடுத்திருக்கிறார்.

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பட வேலைகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, மோகன் பாபு, அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கேரக்டரான குந்தவி நாச்சியார் கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய கதாபாத்திரமான நந்தினி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ரஜினி ஆதரவு தருவாரா.? – காத்திருக்கும் கமல்

Next Post

சிறப்பான வேடம் : அஜித் படம் பற்றி வித்யாபாலன்

Next Post

சிறப்பான வேடம் : அஜித் படம் பற்றி வித்யாபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures