ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வரும் படம் ஆர்ஆர்ஆர். அலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ரம்யா கிருஷ்ணன் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெறுவதாக இருந்தது.
அங்கு நடக்கும் படப்பிடிப்புக்காக ஒரு பாடி பிட்னஸ் கலைஞர் மூலம் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவர் ஒர்க்அவுட்டில் ஈடுபட்டிருந்தபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அதையடுத்து அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் 3 வாரங்களுக்கு அவசியம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்களாம். அதனால், குஜராத்தில் நடைபெற இருந்த படப்பிடிப்பு 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார் ராஜமவுலி.

