ஒவ்வொரு ஹீரோவும் தங்களது 25வது, 5௦வது படங்கள் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவார்கள். அந்தவகையில் மகேஷ்பாபுவின் 25வது படமாக மகரிஷி உருவாகி வருகிறது. வம்சி பைடிப்பள்ளி இயக்கிவரும் இந்தப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய், இறுதியாக மார்ச்-9ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று படக்குழுவினரிடம் இருந்து கசிந்து உள்ளது. அதாவது படத்திற்கு இன்னும் 21 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். ஞாயிறுகளில் கூட தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பபை நடத்தினாலும் முடிவடைவதற்கு ஏப்ரல் மாதம் முழுவதும் சரியாக போய்விடும். அதன்பிறகு போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து ஜூலையில் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என சொல்கிறார்களாம். தற்போது இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இப்படி மகேஷ்பாபு படத்திற்கு எதிர்பாராத விதமாக ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போய் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

