முறையற்ற விதத்தில் மூன்று கோடி ரூபா பணத்தை பயன்படுத்தியதாக தெரிவித்து நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி நேற்று இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
பிரதிவாதியான நாமல் ராஜபக்ஸ எம்.பி.க்கு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

