Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மே 1ல் வருகிறார் மிஸ்டர் லோக்கல்

April 2, 2019
in Cinema
0

சீமராஜா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இடையில் கனா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ரஜினி முருகன் படத்திற்கு பிறகு வெளிவந்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்கள் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத படங்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல் முக்கியமான படமாக அமைகிறது.

அதேபோலத்தான் இயக்குனர் ராஜேஷ் நிலையும். ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பார்க்கவில்லை. ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றவை. எனவே அவருக்கும் இது முக்கியமான படம். ஐரா படத்தில் சற்று சறுக்கியிருக்கும் நயன்தாராவுக்கும் இது முக்கியமான படமாக இருக்கிறது.

இதில் சிவா, நயன்தாராவுடன் யோகிபாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், மைம்கோபி, ஆனந்த் பாபு, ஹரீஷ் பெரடி, சுமன் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கிறது. இதுதவிர ஆர்யா, ஜீவா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறது. படம் வருகிற மே மாதம் 1ந் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

இரண்டு படத்திலும் கதிருக்கு ஒரே வேடமா?

Next Post

‘ஐரா’ இயக்குநருக்கு கார் பரிசு

Next Post

'ஐரா' இயக்குநருக்கு கார் பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures