நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து விட்டதை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தமிழகமெங்கிலும் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் அவரது மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் அளித்த ஒரு பேட்டியில், எதிர்காலத்தில் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றுவீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, என் தந்தை மக்களுக்காக உண்மையாக உழைக்கக் கூடியவர். அவரது சேவை இந்த மக்களுக்கு அவசியம் தேவை. நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு என்னிடம் இல்லை. ஆனால் பின்னால் இருந்து என் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

