தமிழில் மதராசப் பட்டிணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி, ஐ, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். அவருக்கும் லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இருந்தும் இருவரின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. இருவரும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், எமி ஜாக்சன் தற்போது தான் தாய்மை அடைந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
“கூரை மீது ஏறி சத்தமாக கத்த வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், அன்னையர் தினமான இன்று சொல்வதுதான் பொருத்தமான ஒன்று. இந்த உலகத்தில் உன்னை விட வேறு யாரையும் நான் இந்த அளவிற்கு நேசிக்கவில்லை. சுத்தமான மதிப்பான காதல் அது. நமது குட்டி லிப்ராவைப் பார்க்க நாம் காத்திருக்க முடியாது,” என்று இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் தகவலைப் பதிவிட்டுள்ளார்.
‘லிப்ரா’ என்பது 23 செப்டம்பர் முதல் 23 அக்டோபர் வரை இருக்கும் ஆங்கில மாத ராசி. எமி குறிப்பிட்டுள்ள ‘லிப்ரா’ என்பதன் அர்த்தம் அந்த சமயத்தில் அவருக்குக் குழந்தை பிறக்கும் என்பதுதான்.

