Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யோகிபாபுவின் அரசியல் அட்டாக்

April 1, 2019
in Cinema
0

இதுவரை வெறும் காமெடியனாக மட்டுமே நடித்து வந்த யோகிபாபு, தற்போது சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், தர்மபிரபு படத்தில் எமதர்மனாக நடிக்கிறார். அவருடன் கருணாகரன், ரமேஷ் திலக், அழகம் பெருமாள், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் எமனாக வரும் யோகிபாபு, பாவம் செய்தவர்களை சொர்க்கத்துக்கும், புண்ணியம் செய்தவர்களை நரகத்துக்கும் அனுப்பப்போகிறேன் என்கிறார். அதைக்கேட்டு பூலோகத்தில்தான் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் என்றால் எமலோகத்திலுமா? என்று ஒருவர் சொல்கிறார். அதையடுத்து, அம்மா போனால் சின்னம்மா, சின்னம்மா போனால் சின்னய்யா என்பது போன்ற அரசியலை அட்டாக் செய்யும் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆக, தர்மபிரபு தமிழக அரசியலை நேரடியாக அட்டாக் செய்திருப்பது இந்த டிரெய்லரிலேயே தெரிந்து விட்டது. இந்த படத்திற்கு யோகிபாபுதான் வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

“நான் தல இல்ல” ; ஜான்விஜய்க்கு மோகன்லால் பதில்

Next Post

அம்மா ஆன எமி ஜாக்சன்

Next Post

அம்மா ஆன எமி ஜாக்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures