சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் லூசிஃபர் படத்தில் விவேக் ஓபராய் மெயின் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தாலும் கிட்டத்தட்ட அவருக்கு சமமான இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் ஜான்விஜய் அசத்தலாக நடித்துள்ளார். இந்த படத்தில் மயில்வாகனம் என்கிற கெட்ட போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வருகிறார் ஜான்விஜய். ஒருமுறை மோகன்லாலை அவரது ஆசிரமத்தில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் விலங்கு பூட்டி அழைத்துச் செல்வார் ஜான்விஜய்.
அப்போது அங்கு மோகன்லாலுக்காக கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து, மோகன்லாலிடம், “நீ என்ன எம்ஜிஆர் மாதிரி பெரிய தலைவரா.. இல்ல ‘தல’யா..?” என்று எகத்தாளமாக கேள்வி கேட்பார். அதற்கு மோகன்லால் பதிலேதும் பேசாமல் சென்றுவிடுவார் மோகன்லால்.
பின் ஜெயிலில் இருந்து விடுதலையாகி கிளைமாக்ஸில் ஜான்விஜய்யை பழிதீர்க்கும்போது அவரிடம், “நான் தல இல்லடா.. தலையை எடுக்கிறவன்” என பஞ்ச் வசனம் பேசி கைதட்டலை அள்ளுகிறார் மோகன்லால்.. இந்த படத்தில் ஜான் விஜய் முழுக்க முழுக்க தமிழிலேயே வசனம் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

