இலங்கை படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய – இலங்கை படைகளுக்கிடையில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தை ஒதுக்கிவரும் நிலையில் இலங்கை படையினரை ஒரு முக்கியமான பாதுகாப்புப் பங்காளராக அவுஸ்ரேலியா அங்கீகரித்துள்ளமை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய- இலங்கை படைகளுக்கிடையில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பயிற்சிகள் இரு நாடுகளினதும் உறவுகளின் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்கடத்தல்களை முறியடிக்கும் அவுஸ்ரேலியாவின் முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

