சிங்கப்பூரின் ஆகப் பெரிய முட்டை பண்ணையாக செங் சூன் பண்ணை (Seng Choon Farm) திகழ்கிறது.
நாள்தோறும் அங்கு 850,000 கோழிகள் 600,000 முட்டைகளை இடுகின்றன.
அந்த முட்டைகள் உள்ளூர்ச் சந்தையின் 12 விழுக்காடு தேவையைப் பூர்த்திசெய்கின்றன.
சிங்கப்பூரில் நிலம், ஊழியர் ஆகியவைத் தொடர்பான செலவுகள் அதிகரித்து வருவதால், கட்டுப்படியான விலையில் முட்டைகளை விற்க சிங்கப்பூர் பண்ணையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிநாட்டுப் பண்ணைகளில் நாள்தோறும் இரண்டு மில்லியன் முட்டைகள் வரை இடப்படுகின்றன.
அந்தப் போட்டித்தன்மை சிங்கப்பூர் பண்ணையாளர்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனைச் சமாளிக்க தொழில்நுட்பத்தைப் பண்ணையாளர்கள் பெரும் சார்ந்துள்ளனர்.

