நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால் இதுவரையில் 56017 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வறட்சியான காலநிலையினால் பல மாவட்டங்கள் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கோகாலை, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது உலர் காலநிலை நிலவிவருகின்றது.
குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு பவுஸர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

