மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு நிலுவைக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். நானும் அதையே வலியுறுத்தி வருகின்றேன். இது குறித்து பிரதமருடனும் பேச்சு நடத்தப்பட்டது.
எனினும், தேர்தலை நடத்துவதற்காக இயற்றப்பட – திருத்தப்படவேண்டிய சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் காரணமாகவே காலம் தேவைப்படுகின்றது. எனினும், விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது.
எது எப்படியிருப்பினும், எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

