கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷமி மேனன் நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதை பெற்று தந்த படம். ரஜினிகாந்தும் இந்த படத்தை பாராட்டியிருந்தார். அந்த பாராட்டே, கார்த்திக் சுப்பராஜிற்கு பேட்ட பட வாய்ப்பையும் பெற்று தந்தது.
இந்நிலையில், ஜிகர்தண்டா படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதர்வாவின் முதல் நேரடி தெலுங்கு படம் இது. பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். டப்-மாஸ் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு வால்மீகி என பெயர் வைத்துள்ளனர்.

