மயங்கி வீழ்ந்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், தல்லையப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கடும் வெப்பத்தால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு இராசதுரை என்ற 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் உறவிர் வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் தல்லையப்புலம் பகுதியில் பிரதான வீதியில் இருந்து ஒழுங்கை ஒன்றின் இறக்கத்துக்குள் இறங்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளிலுடன் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அயலில் உள்ளவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மாதத்தில் வெயிலினால் இதற்கு முன்னரும் இருவர் உயிரிழந்தமை குறிபிடத்தக்கது.

