Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

12 ஆண்டு உழைப்பை கோட்டைவிட்ட மம்முட்டி பட இயக்குனர்

March 28, 2019
in Cinema
0

சமீபகாலமாக தமிழ் பட உலகில் கதையை திருடிவிட்டார்கள் என்கிற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்க, மலையாளத்திலும் கதாசிரியர்கள் வேறுவிதமான சர்ச்சைகளையும், சங்கடங்களையும் சந்தித்து வருகிறார்கள். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான சஜீவ் பிள்ளை என்பவருக்கு புதுவிதமான சங்கடம். தற்போது மம்முட்டி நடித்து வரும் மாமாங்கம் என்கிற வரலாற்று கதையை கடந்த 12 ஆண்டுகளாக நீண்ட ஆய்வு செய்து உருவாக்கியவர் தான் இந்த சஞ்சீவ் பிள்ளை.

இந்த படத்தையும் இவர் தான் இயக்க ஆரம்பித்தார். அந்த அடிப்படையில் இந்த படத்தின் கதையை அந்த தயாரிப்பாளருக்கே விற்றுவிட்டார். சில நாட்கள் கழிந்த நிலையில் இவர் மீது தயாரிப்பாளர் தரப்பு அதிருப்தி அடைந்து, இந்த படத்தில் இருந்து இவரை நீக்கிவிட்டு இயக்குனர் பத்மகுமார் என்பவரை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார்கள்.

இது குறித்து வழக்கு தொடர்ந்த சஜீவ் பிள்ளை இந்த கதையை தன்னிடம் திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைத்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கதையை முறைப்படி அவர் தயாரிப்பாளருக்கு எழுதிக் கொடுத்து விட்டதால் அவர்களுக்கே அது சொந்தம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தற்போது மிகுந்த சோகத்தில் இருக்கிறார் சஜீவ் பிள்ளை.

Previous Post

ராம் சரணுக்கு வாழ்த்து சொன்ன அமிதாப்

Next Post

போர்க் குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்- சரத் பொன்­சேகா உத்தரவு

Next Post

போர்க் குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்- சரத் பொன்­சேகா உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures