தெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இன்று அதிகாலை திடீர் என்று தீப்பற்றிக் கொண்டுள்ளதுடன், பின்னர் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

