தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். கிரீஷய்யா இயக்கும் இப்படத்தில் துருவ் விக்ரமுடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். ரதன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் தாடி முறுக்கு மீசை கெட்டப்பில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். தனது பல படங்களில் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள விக்ரம், தற்போது தனது மகன் துருவ் விக்ரமின், ஆதித்யா வர்மா பட கெட்டப்பிற்கு தானும் மாறி, மகனுடன் அமர்ந்து போட்டோ ஷூட் செய்துள்ளர். அப்படி அப்பா – மகன் இருவருமே ஒரே மாதிரியான கெட்டப்பில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம்.

