முப்பத்தைந்து வயதாகி விட்ட நயன்தாராவின் மார்க்கெட் இப்போதும் உச்சத்தில் இருக்கிறது. கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வரும் அவர், முன்பெல்லாம் ‘வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்தால் என் ‘இமேஜ்’ போய் விடும்…’ என்று மறுத்து வந்தார். ஆனால், இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வருகிறார். இதனால், வளர்ந்து வரும் இளவட்ட நடிகையர் தங்களுக்கான வாய்ப்புகளையும் அபகரித்துக் கொள்கிறாரே என்று நயன்தாரா மீது, பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். அதுக்கும் இருப்பாள்; இதுக்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்கு பங்கும் இருப்பாள்.

