Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் ?

March 23, 2019
in Cinema
0

2020ம் ஆண்டின் மிகப் பெரும் பட்ஜெட் படங்களில் ஒன்றாக ‘ஆர்ஆர்ஆர்’ படம் உருவாகி வருகிறது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஒரு தெலுங்குப் படமாகவோ, ஹிந்திப் படமாகவோ உருவாக்கவில்லை. ஒரு இந்தியப் படமாக உருவாக்கி வருகிறார்கள். ‘பாகுபலி’ படங்கள் அளவிற்கு இந்தப் படமும் சாதனை படைக்கும் என இப்போதே பேச்சு ஆரம்பமாகிவிட்டது. அடுத்த ஆண்டு ஜுலை 30ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

அதே தினத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘இன்ஷால்லா’ படத்தை வெளியிட உள்ளார்கள் என பாலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில், “20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும், சஞ்சய்யும் மீண்டும் இன்ஷால்லா படத்தின் மூலம் இணைந்துள்ளோம்,” என சல்மான் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர்கள் கடைசியாக இணைந்து பணியாற்றிய ‘சாவாரியா’ படம் 2007ல்தான் வெளிவந்தது. ஆனால், அந்தப் படத்தில் சல்மான் சிறப்புத் தோற்றத்தில்தான் நடித்திருந்தார். அதனால், அவர் அதைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜமவுலி இருவருமே பிரம்மாண்டப் படைப்புகளைக் கொடுக்கும் இயக்குனர்கள், சொன்ன சமயத்தில் படத்தை முடிக்க மாட்டார்கள். அதனால், இரண்டு படங்களின் வெளியீடுகளுமே தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்றும் மற்றொரு பக்கம் விமர்சிக்கிறார்கள்.

Previous Post

உறியடி 2 டீசர் வெளியீடு

Next Post

பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்

Next Post

பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures