Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உறியடி 2 டீசர் வெளியீடு

March 23, 2019
in Cinema
0

2016ல் உறியடி என்ற படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் விஜய்குமார். உறியடி சுமாரான வெற்றியைப் பெற்றாலும் பல தரப்பினருடைய பாராட்டைப்பெற்ற படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

விஜய்குமார் ஹீரோவாகவும், கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளார்.

இப்போது சமூகத்தில் நிலவும் சாதிப்பிரிவினை பிரச்னையை தான் உறியடி 2 பேசப்போகிறது. 36 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இன்று வெளியானது.

43 விநாடிகள் ஓடும் இந்த டீசரில், “சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம், சகலமும் அவலமாகும், மனித தன்மை கேள்விக்குறியாகும், பொறுமைகாத்தால் உடமை பறிப்போகும், உரிமைக்காக போராடுவதே நமது கடமை, அரசியலில் நாம தலையிடணும், இல்லைன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில் தலையிடும்” என பவர்புல் வசனம் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த டீசர், சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.

Previous Post

மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி

Next Post

ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் ?

Next Post

ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures