சிறைச்சாலை கைதிகள் இருவர், சிறைச்சாலைக்குள் துளை போட்டு, அதுவழியாக தப்பிக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
Bois-d’Arcy சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு சிறைச்சாலை கைதிகள் Yvelines மாவட்டத்தின் Bois-d’Arcy இல் உள்ள சிறைச்சாலையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இரு சிறைச்சாலை கைதிகள் சிறைச்சாலை சிவற்றில் துளை ஏற்படுத்தி, அதன் வழியாக தப்பிச் செல்ல முயன்றார்க்ள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டனர்.
பெப்ரவரி 22 ஆம் திகதி இந்த துளை கண்டுபிடிக்கப்பட்டது. ஜன்னல் கம்பிகளில் சிலவற்றை அகற்றியும் இருந்தனர். எதன்மூலம் இந்த செயலை மேற்கொண்டிருந்தார்கள் என அறிய முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மேலதிகமாக எட்டு மற்றும் பன்னிரெண்டு மாதங்கள் சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டது.