Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான புதிய வர்த்தமானி

March 14, 2019
in News, Politics, World
0

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான கூட்டம் ஒன்று 14.03.2019 அன்று கொழும்பு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது  இக்கூட்டத்தில் கல்வியற் கல்லூரிகளின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அபேநாயக்க, விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சுமூகமற்ற சூழ்நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன  இது தொடர்பாக ஆராய்ந்த பொழுது அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை சுமூகமான நிலைக்கு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது

மாணவர்களுக்கான உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது   நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு எட்டப்பட்டதுடன் ஒழுக்காற்று குழுவினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதுடன் குறித்த விடயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாக இடமாற்றம் செய்வதா அல்லது வேறு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் தீர்மானிப்பது எனவும் அதுவரையில் அவர்கள் தற்காலிக இடமாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது

இதன்போது விரிவுரையாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆணையாளர் அது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும், அது தொடர்பாக விரிவுரையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்

எதிர்வரும் காலங்களில் அங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன  அந்த குழுவில் விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகள், மாணவர்கள் அணைவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

கடந்த காலங்களில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு  பெருந்தோட்டதுறையை சார்ந்த மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டனர் பெருந்தோட்டதுறையில் கணித, விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவான எண்ணிக்கையினர் இருந்த காரணத்தினால் அந்த துறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது

எனவே எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தில் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது  இது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்

அதே நேரம் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு மாதம் ஒரு முறை கல்வி அமைச்சில் இருந்து பணிப்பாளர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து கல்லூரியில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்தி கல்லூரியை சிறப்பாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்!

Next Post

குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வருமாறு அரியநேத்திரனுக்கு அழைப்பு

Next Post

குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வருமாறு அரியநேத்திரனுக்கு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures