Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒத்த செருப்பை காப்பி அடிக்காமல் இயக்குகிறேன் : பார்த்திபன்

March 12, 2019
in Cinema
0

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கும் படம் ஒத்த செருப்பு : சைஸ் 7. இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :

‘வழக்கமான’ ‘வித்தியாசமான’ – இப்படி எதிர்மறையான’ இரு வார்த்தைகளை இணைத்தே, என் படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு நான் எதிர்பாராமலே ஏற்பட்டு விடுகிறது. அதை ஈடு செய்யும் விதமாக நானும் கடுமையாக உழைத்து காப்பி அடிக்காமல் சிந்தித்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக, புத்தம் புதிய அணுகுமுறையிலான திரைக்கதையை அமைத்து எடுத்துள்ள படமே ‘ஒத்த செருப்பு சைஸ்-7′.

ஒத்த செருப்பின், ஒத்த சிறப்பு பாராட்டும்படியாக இருக்கும். அதை தவிர, மத்த செய்திகள், அதாவது இந்த ஒத்த செருப்பின் ஜோடி செருப்பு எது? எங்கே? யார்? ஏன் சைஸ்-7, வேற என்னென்ன சிறப்பு அம்சங்கள்? இவை அனைத்தையும் சொல்லும் தருணம் விரைவில் வரும்.

இது ஒரு குறுகிய கால தயாரிப்பு. பார்லிமென்ட் தேர்தலில் எப்படியாவது ஓட்டுவாங்கிவிட வேண்டும் என்று சுய கவுரவத்தை விட்டுக் கொடுத்தும், மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்தும் கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல், இப்படத்தில் நான் அமைத்திருக்கும் கூட்டணியால் வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது.

நான் நேசிக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுடன் இணையும் முதல் படம். ஒளிப்பதிவில் உச்சம் தொட்ட ராம்ஜியுடன் நான் இணையும் முதல் படம். “ஆத்தா’ நான் உண்டாயிட்டேன்” என பிரசவ-பரவசம் அடையும் அளவுக்கு துவக்கத்திலேயே எற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பில், கூடுதலாக இருக்கும் படபடபோடு படப்பிடிப்பை முடித்து விட்டு உங்களை இன்முகத்தோடு இனிதே சந்திக்கிறேன்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.

Previous Post

மீண்டும் தூசி தட்டப்படும் ‘தெறி’ தெலுங்கு ரீமேக்

Next Post

வைபவ் சிக்சர் அடிப்பாரா?

Next Post

வைபவ் சிக்சர் அடிப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures