பிரான்சின் பெருமதிப்பிற்குரிய பெண்ணாக, பெண்ணியப் போராளியாக மதிப்பளிக்கப்பட்டு, இறந்தபின்னர் மாவீரர்களின் கல்லறையில் புதைக்கப்பட்ட சிமோன் வெய் நினைவாக முதல் முதலில், Le Prix Simone Veil விருது, பிரான்சின் அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
கமெரூனிலும், அதன் அண்டைய கறுப்பின் நாடுகளிலும், குழந்தைத் திருமணத்திற்கு எதிரானக் போராடிவரும், கறுப்பினப் பெண் போராளியான Aissa Doumara Ngatansou இற்கு இந்த பெருமதிப்பிற்குரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது எலிசே மாளிகையில் சர்வதேசப் பெண்கள் தினமான இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆண் பெண்களிற்கிடையிலான சமன்பாடுகளிற்கான அமைச்சகத்தின் அரசாங்கச் செயலாளர் மார்லேன் சியாப்பா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-ஈவ் லூதிரியான், சுகாதாரம் மற்றும் சமத்துவத்திற்கான அமைச்சர் அன்யேஸ் புசின் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதின் மூலம் இந்தப் பெண்ணிற்கு 100.000€ வழங்கப்பட்டுள்ளது.

