Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்: சசி இயக்குகிறார்

March 8, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சசி. 20 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்தாலும் அவர் இயக்கியது 7 படங்கள்தான். சொல்லாமலே, சீனு, ரோஜாகூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து, பிச்சைக்காரன். இவைதான் அவர் இயக்கிய படம். இதில் ஐந்து ஐந்து ஐந்து தவிர மற்ற அனைத்தும் வெற்றிப் படங்கள். சசி அடுத்து இயக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இதனை பிரபல விநியோகஸ்தர் ரமேஷ்.பி.பிள்ளை தயாரிக்கிறார். இவர் அரண்மணை, மாயா, காஞ்சனா, பாகுபலி உள்பட பல படங்களின் விநியோகஸ்தர்.

இதில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கிறார்கள். மலையாள நடிகை லிஜோமோள் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இன்னொரு ஹீரோயினாக காஷ்மீரா நடிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சித்து குமார் இசை அமைக்கிறார். இருவருமே புதியவர்கள்.

“இது அக்காள், தம்பி பாசத்தை வித்தியாசமாக சொல்லும் படம். அக்காவாக லிஜோமோள் நடிக்கிறார், தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். லிஜோமோள் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்” என்கிறார் சசி.

Previous Post

தயாரிப்பாளர்கள் கில்டு சங்க பெயர் நீக்கமா? ஜாக்குவார் தங்கம் விளக்கம்

Next Post

அஜீத், விஜய், விஷால், சூர்யாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

Next Post

அஜீத், விஜய், விஷால், சூர்யாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures