Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருட்கள் மீது தடை – அமெரிக்கா மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு

March 8, 2019
in News, Politics, World
0

பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது.

மேலும் ஹூவாய் நிறுவனம் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.இதற்கிடையில் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது.

அதனை தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை போட்டது.

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் – துணை ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

Next Post

13 ஆம் திகதிவரை ஐ.நா கோரிக்கைகளை மக்கள் சமர்ப்பிக்கலாம

Next Post

13 ஆம் திகதிவரை ஐ.நா கோரிக்கைகளை மக்கள் சமர்ப்பிக்கலாம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures